ஓசூர்,டிச.31: ஓசூர் அருகே தனியார் நிறுவன கழிவுநீரை டேங்கர் லாரியில் எடுத்துவந்து பேகேப்பள்ளி ஏரியில் கலக்கச்செய்த லாரி டிரைவரை, ரோந்து சென்ற போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் சிப்காட் போலீசார், பேகேப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் டேங்கர் லாரி ஒன்றில் இருந்து கழிவுநீரை ஏரியில் விட்டனர். இதைபார்த்த போலீசார், லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவரது பெயர் திருநாவுக்கரசு(44) என்றும், திருப்பத்தூர் மாவட்டம் காவேரியூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஓசூர் ராஜாஜி நகரில் தங்கி டேங்கர் லாரி ஓட்டி வந்துள்ளார். நேற்று தனியார் நிறுவன கழிவுநீரை டேங்கர் லாரியில் ஏற்றிவந்து, ஏரியில் வெளியேற்றியது தெரியவந்தது. இதையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார், டேங்கர் லாரி டிரைவரான திருநாவுக்கரசுவை கைது செய்தனர்.
The post தனியார் நிறுவன கழிவுநீரை ஏரியில் கலந்த டிரைவர் appeared first on Dinakaran.