×

கனகதாசர் ஜெயந்தி விழாவில் நூதன வழிபாடு

தேன்கனிக்கோட்டை, டிச.30: தேன்கனிக்கோட்டையில் பக்த கனகதாசர் 537வது ஜெயந்தி விழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் கனகதாசர் சேவாசமிதி சார்பில் பக்த கனகதாசர் 537வது ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவிற்கு கனகதாசர் சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர் பாபண்ணா தலைமை வகித்தார். திம்மராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் ஆந்திரா, கர்நாடகா, தமிநாடு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து குரும்பர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 20க்கும் மேற்பட்ட குல தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய வீதிகளில் வழியாக வீரகாசி நடனத்துடன் ஊர்வலமாக பஸ் நிலையத்தில் அமைத்திருந்த விழா மேடை அருகே கொண்டு செல்லப்பட்டது.

அங்கு கூடிய குரும்பர் குல மக்கள், தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பாவடா எனும் தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு செய்தனர். அதில் 20க்கும் மேற்பட்டோர் சாமி ஆடி தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செய்தனர். இதில், தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரும்பர் சங்க நிர்வாகிகள், குருபர் இனத்தினர் கலந்து கொண்டனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பக்த கனகதாசர் சேவா சமிதி சார்பில், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

The post கனகதாசர் ஜெயந்தி விழாவில் நூதன வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Kanakadasa Jayanti festival ,Thekkanikottai ,537th Jayanti festival ,Bhakta Kanakadasa ,537th Jayanti festival of Bhakta Kanakadasa ,Kanakadasa Seva Samithi ,Thekkanikottai, Krishnagiri district ,Kanakadasa Seva Samithi… ,
× RELATED தளி அருகே சோகம்: பள்ளத்தில் பைக் கவிழ்ந்து 2 வாலிபர் பரிதாப பலி