கிருஷ்ணகிரி, டிச.30: தமிழகம் முழுவதும் தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சுற்றுலா தளங்களுக்கு அழைத்து சென்று வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்டைய மாவட்டங்களாக தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்காவிற்கு கூட்டம், கூட்டமாக வந்து, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களான சருக்கு பலகை, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். மேலும், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் தங்கள் குழந்தைகளை விளையாட வைத்தும், அருகில் உள்ள படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
குறிப்பாக கிருஷ்ணகிரி அணையின் மேற்புறத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட மீன் கடைகளில், வறுவல் மீன், குழம்பு மீன்களை குடும்பம், குடும்பமாக சாப்பிட்டு மகிழ்ந்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கடைகளில் வியாபாரம் அதிகளவில் நடந்து வருவதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கிருஷ்ணகிரி அணை மற்றும் அவதானப்பட்டி பூங்காக்களில் கூட்டம் அலைமோதியது.
The post அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் குவிந்த மக்கள் appeared first on Dinakaran.