- மார்க்சிஸ்ட்
- தென்கனிக்கோட்டை
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- மத்திய அமைச்சர்
- அமித் ஷா
- அம்பேத்கர்
- தேன்கனிக்கோட்டை
- தொழிற்சங்க செயலாளர்
- நடராஜன்
- மாவட்ட செயலாளர்
- கம்யூனிஸ்ட்
- தின மலர்
தேன்கனிக்கோட்டை, டிச. 31: தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில், அம்பேத்கரை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தளி ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், ஜெயராமன், இருதயராஜ், அனுமப்பா, கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.