கிருஷ்ணகிரி, டிச.28: கிருஷ்ணகிரி அருகே, உத்தனப்பள்ளி அடுத்த துப்புகானப்பள்ளி அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன்(27). சரக்கு வேன் டிரைவரான இவருக்கு, திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால், பெண் பார்ப்பதில் சுணக்கம் காட்டுவதாக கூறி, பெற்றோரிடம் பூவரசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 24ம் தேதி, மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், வெளியே சென்ற பூவரசன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாயார் செல்வி, உத்தனப்பள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post சரக்கு வேன் டிரைவர் மாயம் appeared first on Dinakaran.