×

அரசு ஆடவர் கல்லூரியில் உலக உணவு நாள் விழா

கிருஷ்ணகிரி, அக்.17: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் உலக உணவு நாள் விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொ) ரவி தலைமை வகித்தார். பேராசிரியர் விமல்ராஜ் வரவேற்றார். நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் கலந்து கொண்டு பேசுகையில், ‘தமிழகத்தில் கல்லூரிகளிலும் மதிய சத்துணவு திட்டத்தை கொண்டு வர, உலக உணவு நாள் தினமான இன்று தமிழக முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறோம். கல்லூரிகளில் சீரான குடிநீர் மற்றும் கூடுதல் கழிப்பிட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்,’ என்றார். விழாவின் போது, நுகர்வோர் குறித்த கையேடுகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இதில், நுகர்வோர் சங்க நிர்வாகிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி உதவி பேராசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

The post அரசு ஆடவர் கல்லூரியில் உலக உணவு நாள் விழா appeared first on Dinakaran.

Tags : World Food Day ,Government Men ,College ,Krishnagiri ,Krishnagiri Government Boys Arts College ,College Principal ,P) Ravi ,Prof. ,Vimalraj ,Chandramohan ,State General Secretary ,Consumer Welfare Protection Association ,Government Men's College ,Dinakaran ,
× RELATED கிண்டி பொறியியல் கல்லூரி மாணவி...