×
Saravana Stores

கண்டிப்பாக பாகிஸ்தான் சென்று விளையாடுவோம்: குல்தீப் பேட்டியால் சர்ச்சை

மும்பை: இந்திய அணி கடைசியாக 2008ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் தான் பங்கேற்றது. அதன் பிறகு 16 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லவில்லை. இதுகுறித்து இந்திய அணியின் ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ் அளித்த பேட்டியில், “ஒரு கிரிக்கெட் வீரராக நாங்கள் எங்கு அனுப்பினாலும் அங்கு சென்று விளையாடுவோம். நான் இதுவரை பாகிஸ்தானுக்கு சென்றதே கிடையாது. இதனால் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன். பாகிஸ்தான் மக்கள் மிகச்சிறந்தவர்கள்.

எப்போது எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது நாங்கள் கண்டிப்பாக அங்கு சென்று விளையாடுவோம்’’ என்றார். பிசிசிஐ தங்கள் அணி வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது இந்திய வீரர் ஒருவரே தாங்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மிகவும் ஆர்வமுடன் இருக்கிறோம் என்று கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது பிசிசிஐ எடுத்திருக்கும் முடிவுக்கு நேர்மாறான கருத்து என்பதால் குல்தீப் யாதவ்வை பிசிசிஐ கண்டிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தற்போது குல்தீப் யாதவின் இந்த கருத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் முறையிட வாய்ப்பு இருக்கிறது. இதனால் குல்தீப் யாதவுக்கு சிக்கல் உருவாகலாம்.

The post கண்டிப்பாக பாகிஸ்தான் சென்று விளையாடுவோம்: குல்தீப் பேட்டியால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Kuldeep ,Mumbai ,Asia Cup ,India ,Kuldeep Yadav ,Indian ,Dinakaran ,
× RELATED 30 நிமிடத்திற்குள் சீக்கிய...