×

வங்கதேச ஒருநாள் அணி கேப்டனாக நீடிக்கிறார் ஷான்டோ

தாக்கா: ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹசன் ஷான்டோ நீடிக்கிறார். ஆப்கானிஸ்தான் – வங்கதேசம் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நவ. 6,9, 11 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

3 வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான கேப்டனாக தொடர்வதில் தனக்கு விருப்பமில்லை என்று ஷான்டோ ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், ஆப்கான் ஒருநாள் தொடருக்கு அவர் தலைமை பொறுப்பில் நீடிக்கிறார். எனினும், இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ள வங்கதேச அணி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. ஆப்கான் தொடர் முடிந்ததும் கேப்டன் பொறுப்பில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* வங்கதேச ஒருநாள் அணி: நஜ்முல் உசைன் ஷான்டோ (கேப்டன்), சவும்யா சர்கார், தன்சித் ஹசன், ஜாகிர் ஹசன், முஷ்பிகுர் ரகிம், மகமதுல்லா, தவ்ஹித் ஹிருதய், ஜேகர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷத் உசைன், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்டாபிசுர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம், நஹித் ராணா.

The post வங்கதேச ஒருநாள் அணி கேப்டனாக நீடிக்கிறார் ஷான்டோ appeared first on Dinakaran.

Tags : Shanto ,Bangladesh ODI ,Dhaka ,Najmul Hasan Shanto ,Bangladesh team ,Afghanistan ,ODI ,Bangladesh ODI series ,Sharjah Cricket Stadium ,Bangladesh ,Dinakaran ,
× RELATED வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால் இந்து...