×

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக வென்றது

மும்பை: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக வென்றது. இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மும்பை டெஸ்ட் போட்டியில் 147 ரன் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 121 ரன்களில் ஆட்டமிழந்தது.

இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், ஜடேஜா- அஷ்வின் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்துள்ளது. முன்னதாக இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன் குவித்து ஆல் அவுட்டானது. வாங்கடே மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன் குவித்து ஆட்டமிழந்தது. டேரில் மிட்செல்ல் 82, வில் யங் 71, கேப்டன் லாதம் 28, பிலிப்ஸ் 17 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 5, வாஷிங்டன் 4, ஆகாஷ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்திருந்தது. கில் 31 ரன், ரிஷப் பன்ட் 1 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடியை பிரிக்க நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட வியூகங்கள் பலனளிக்கவில்லை. கில் 66 பந்தில் அரை சதம் அடிக்க, மறு முனையில் அதிரடி காட்டிய பன்ட் 36 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார்.

இருவரும் 5வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தனர். பன்ட் 60 ரன் (59 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சோதி பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கில் 90 ரன் எடுத்து (146 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) அஜாஸ் படேல் சுழலில் டேரில் மிட்செல் வசம் பிடிபட்டார். ஒரு முனையில் வாஷிங்டன் சுந்தர் உறுதியுடன் போராட… ஜடேஜா 14, சர்பராஸ் கான் 0, ஆர்.அஷ்வின் 6, ஆகாஷ் தீப் (0) பெரிதாகக் கை கொடுக்கவில்லை. இந்தியா முதல் இன்னிங்சில் 59.4 ஓவரில் 263 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. வாஷிங்டன் 38 ரன்னுடன் (36 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து பந்துவீச்சில் அஜாஸ் படேல் 5, மேட் ஹென்றி, கிளென் பிலிப்ஸ், ஈஷ் சோதி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 28 ரன் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் லாதம் 1 ரன் எடுத்து ஆகாஷ் தீப் வேகத்தில் கிளீன் போல்டாக, அந்த அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. டெவன் கான்வே – வில் யங் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்தது. கான்வே 22 ரன் (47 பந்து, 2 பவுண்டரி) எடுத்து வாஷிங்டன் சுழலில் கில் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ரச்சின் 4 ரன் எடுத்த நிலையில், அஷ்வின் சுழலில் விக்கெட் கீப்பர் பன்ட்டால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஓரளவு தாக்குப் பிடித்த வில் யங் – டேரில் மிட்செல் இணை 4வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. மிட்செல் 21 ரன், பிளண்டெல் 4 ரன் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட்டாக, நியூசிலாந்து 100 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், அதிரடியில் இறங்கிய பிலிப்ஸ் 26 ரன் (14 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அஷ்வின் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். சோதி 8 ரன்னில் வெளியேறினார்.

பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த வில் யங் 51 ரன் (100 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அஷவின் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டார். மேட் ஹென்றியை (10 ரன்) ஜடேஜா கிளீன் போல்டாக்க, நியூசிலாந்து 2ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்துள்ளது. அஜாஸ் படேல் 7 ரன்னுடன் களத்தில் உள்ளார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 4, அஷ்வின் 3, ஆகாஷ், வாஷிங்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 1 விக்கெட் இருக்க, நியூசிலாந்து 143 ரன் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதால் 3ம் நாளான இன்று இந்தியா ஆறுதல் வெற்றியை வசப்படுத்தும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இன்று நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக வென்றது. இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 147 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி. இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து 174 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணியில் வில் யங் 51 ரன், பிலிப்ஸ் 26 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

 

The post இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக வென்றது appeared first on Dinakaran.

Tags : New Zealand ,India ,Mumbai ,Test ,Dinakaran ,
× RELATED நியூசி.யுடன் 2வது ஓடிஐ ஆஸி. மகளிர் அபார வெற்றி: சதமடித்த அனபெல் ஆட்டநாயகி