×

ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்கள்

மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலம் இம்மாதம் நடைபெற உள்ள நிலையில், 10 அணிகளும் தக்கவைத்த வீரர்கள் பட்டியல், ஊதிய விவரத்தை வெளியிட்டுள்ளன. தக்கவைக்கப்பட்ட வீரர்களுக்கான ஊதியம் போக எஞ்சிய தொகையை பயன்படுத்தி மெகா ஏலத்தில் புதிய வீரர்களை தேர்வு செய்யலாம்.

* சென்னை: ருதுராஜ் (ரூ.18 கோடி), ஜடேஜா (ரூ.18 கோடி), பதிரணா (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ.4 கோடி). கையிருப்பு: ரூ. 55 கோடி.

* ஐதராபாத்: கிளாஸன் (ரூ.23 கோடி), கம்மின்ஸ் (ரூ.18 கோடி), அபிஷேக் (ரூ.14 கோடி), ஹெட் (ரூ.14 கோடி), நிதிஷ் குமார் (ரூ.6 கோடி). கையிருப்பு: ரூ.45 கோடி.

* பெங்களூரு: கோஹ்லி (ரூ.21 கோடி), ரஜத் (ரூ.11 கோடி), யாஷ் தயாள் (ரூ.5 கோடி). கையிருப்பு: ரூ. 83 கோடி.

* குஜராத்: ரஷீத் கான் (ரூ.18 கோடி), கில் (ரூ.16.5 கோடி), சுதர்சன் (ரூ.8.5 கோடி), திவாதியா (ரூ.4 கோடி), ஷாருக் கான் (ரூ.4 கோடி). கையிருப்பு: ரூ.69 கோடி.

* டெல்லி: அக்சர் (ரூ.16.5 கோடி), குல்தீப் (ரூ.13.25 கோடி), ஸ்டப்ஸ் (ரூ.10 கோடி), போரெல் (ரூ.4 கோடி). கையிருப்பு: ரூ. 73 கோடி.

* கொல்கத்தா: ரிங்கு (ரூ.13 கோடி), வருண் (ரூ.12 கோடி), நரைன் (ரூ.12 கோடி), ரஸ்ஸல் (ரூ.12 கோடி), ராணா (ரூ.4 கோடி), ரமண்தீப் (ரூ.4 கோடி). கையிருப்பு: ரூ.51 கோடி.

* மும்பை: பும்ரா (ரூ.18 கோடி), சூரியகுமார் (ரூ.16.35 கோடி), ஹர்திக் (ரூ.16.35 கோடி), ரோகித் (ரூ.16.35 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி). கையிருப்பு: 45கோடி.

* ராஜஸ்தான்: சாம்சன் (ரூ.18 கோடி), ஜெய்ஸ்வால் (ரூ.14 கோடி), பராக் (ரூ.14 கோடி), ஜுரெல் (ரூ.14 கோடி), ஹெட்மயர் (ரூ.11 கோடி), சந்தீப் (ரூ.4 கோடி). கையிருப்பு: ரூ.41 கோடி.

* லக்னோ: பூரன் (ரூ.21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயாங்க் யாதவ் (ரூ.11 கோடி), மோசின் கான் (ரூ.4 கோடி), பதோனி (ரூ.4 கோடி). கையிருப்பு: ரூ.69 கோடி.

* பஞ்சாப்: சஷாங்க் சிங் (ரூ.5.5 கோடி), பிரப்சிம்ரன் (ரூ.4 கோடி). கையிருப்பு: ரூ.110.5 கோடி.

* தொடர்ந்து 5 ஆண்டுகள் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்கள் உள்நாட்டு ஆட்டக்காரர்களாக கருதப்படுவார்கள். அந்த அடிப்படையில் தோனிக்கு ஊதியமாக ரூ.4 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : IPL ,MUMBAI ,IPL T20 ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் வீரர்கள் ஏல சூதாட்டம்: வாலிபர் கைது