×

கே.ஆர்.எஸ். அணையிலிருந்து அதிகளவில் நீர் வெளியேற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் எந்த நேரத்திலும் 30,000 முதல் 50,000 கன அடி வரை நீர் திறக்கப்படும் என காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவு 124.8 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 123.76ஆக உள்ளது. இன்று காலை முதல் அணைக்கான நீர்வரத்து 33,000 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இன்று காலை நிலவரப்படி 10,000 கன அடியாக இருந்தது.

அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 33,000 முதல் 50,000 கன அடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அணையின் கொள்ளளவு முழுமையாக எட்ட வாய்ப்புள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அதிகளவு நீர் வெளியேற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கே.ஆர்.எஸ். அணையிலிருந்து அதிகளவில் நீர் வெளியேற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : KRS ,Cauvery ,Karnataka State ,K.R.S. ,Dinakaran ,
× RELATED ?சுகப்பிரசவம் ஏற்பட என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்?