×

திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் பொதுமக்கள் புகார் மீது விரைந்து தீர்வு காண வேண்டும்

*போலீசாருக்கு கூடுதல் எஸ்பி உத்தரவு

திருப்பதி : பொதுமக்கள் புகார் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என போலீசாருக்கு திருப்பதி கூடுதல் எஸ்பி விமலாகுமாரி உத்தரவிட்டார்.திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நேற்று, எஸ்பி பரமேஸ்வர் உத்தரவின்பேரில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூடுதல் எஸ்பி விமலாகுமாரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

அப்போது, கூடுதல் எஸ்பி ஒவ்வொருவரிடமும் வழக்கு குறித்து விசாரித்து, அந்தந்த காவல் நிலையங்களில் விவரங்களை தொலைபேசியில் கேட்டறிந்தார். தகவல் அளித்து புகார்களை விரைந்து தீர்த்து நீதி வழங்கவும், எந்த சூழ்நிலையிலும் புகார்களில் அலட்சியம் காட்டாமல் இருக்கவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், குடும்ப தகராறு, நிதிக்குற்றங்கள், சொத்துத்தகராறு மற்றும் பிற பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். அதன்படி, நேற்று நடந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 40 பேர் எஸ்பி அலுவலகத்திற்கு வந்து தங்களது புகார் மனுக்களை அளித்தனர். ஸ்பந்தனா திட்டத்தின் கீழ் வரும் புகார்கள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட்டு உரிய காலத்திற்குள் புகார்தாரர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். தொலைதூரத்தில் இருந்து எஸ்பி அலுவலகத்திற்கு வர முடியாத முதியோர், பெண்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் அளிக்கும் புகார்கள் ஸ்பந்தனா புகாராக கருதப்படும் என கூடுதல் எஸ்பி விமலாகுமாரி தெரிவித்தார்.

The post திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் பொதுமக்கள் புகார் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tirupati SP ,Tirupati ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...