இம்பால்: மணிப்பூரில் தெங்னோபால் மாவட்டத்தில் பல்லெல் அருகே மால்நோய் கிராமத்தில் வன்முறையில் ஈடுபடுவதற்கு முயன்ற ஆயுதம் ஏந்திய கும்பல் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். துப்பாக்கி சூடு தகவல் பரவிய நிலையில் ஏராளமானவர்கள் பழங்குடியினர் கிராமத்துக்கு செல்ல முயன்றனர்.
அவர்களை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது கும்பலில் இருந்த போலீஸ் உடை அணிந்த சிலர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த சம்பவங்களில் ராணுவ மேஜர் உட்பட 50 பேர் காயமடைந்தனர். இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தலையில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37வயது நபர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.
The post பாதுகாப்பு படையுடன் மோதல் மணிப்பூர் பலி 3 ஆக உயர்வு appeared first on Dinakaran.
