×

ஜி 20 உச்சி மாநாடு மனிதனை மையமாகக் கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு புதிய பாதை வகுக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி: ஜி 20 உச்சிமாநாடு மனிதனை மையமாகக் கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு புதிய பாதையை வகுக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். டெல்லியில் ஜி 20 உச்சிமாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதனையொட்டி, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி, “கடைக்கோடியில் உள்ள அடித்தட்டு மக்களுக்கும் சேவை செய்வதற்கான அவரது நோக்கத்தை பின்பற்றுவது முக்கியம்,” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “தொழில்நுட்ப மாற்றம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற துறைகளுக்கு இந்தியா மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உலக அமைதியை உறுதி செய்வதில் கூட்டாக பணியாற்ற விரும்புகிறது.

இந்தியாவின் ஜி 20 தலைவர் பதவி அனைவரையும் உள்ளடக்கியது. இது மனிதனை மையமாகக் கொண்டு வலுவான, நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். வளர்ச்சி குறித்த தெற்கு நாடுகளின் கவலைகளுக்கு இந்தியா தீவிரமாக குரல் கொடுத்தது. நமது கலாச்சார நெறிமுறைகளில் வேரூன்றியுள்ள, ‘வசுதைவ குடும்பகம் – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக பார்க்கும் இந்தியாவின் கண்ணோட்டத்தை ஆழமாக எதிரொலிக்கிறது,” என்று தெரிவித்தார்.

* உலக வங்கி அறிக்கையே சான்று

பிரதமர் மோடி மேலும் தனது டிவிட்டர் பதிவில், “நிதி சேவைகளை உள்ளடக்கிய டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா முன்னேறி இருப்பதற்கு உலக வங்கியின் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையொன்றே போதுமானது. அதில், கடந்த 6 ஆண்டுகளில் நிதியை உள்ளடக்கிய இலக்குகளில் இந்தியா அதன் இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. இல்லையென்றால், இந்த இலக்குகளை எட்ட 47 ஆண்டுகளாகும் என்று கூறப்பட்டுள்ளது,” என குறிப்பிட்டுள்ளார்.

The post ஜி 20 உச்சி மாநாடு மனிதனை மையமாகக் கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு புதிய பாதை வகுக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : G20 summit ,PM Modi ,New Delhi ,Dinakaran ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது