×

ஆசிரியர் தின நிகழ்ச்சியில் நிலை தடுமாறி விழுந்தார் பீகார் முதல்வர் நிதிஷ்

பாட்னா: பீகாரில் பாட்னா பல்கலைக் கழகத்தில் நடந்த ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதல்வர் நிதிஷ் குமார் வளாகத்தில் தடுமாறி விழுந்தார். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாட்னா பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் நிகழ்ச்சியில் பங்கேற்க பாட்னா பல்கலைக் கழகம் சென்றார். அப்போது, நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு செல்ல முயன்ற முதல்வர் நிதிஷ் குமார் அந்த வளாகத்தினுள் ஆசிரியர் தின நினைவாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரால் திறந்து வைக்கப்பட்ட நினைவுக் கல் இடறி நிலை தடுமாறினார். அவரது பாதுகாவலர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இதனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதியானது.

The post ஆசிரியர் தின நிகழ்ச்சியில் நிலை தடுமாறி விழுந்தார் பீகார் முதல்வர் நிதிஷ் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Chief Minister ,Nitish ,Teacher's Day ,Patna ,Nitish Kumar ,Teacher ,Day ,Patna University ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...