×

நேருவை குறை கூறுவதா?.. காங். பொதுச் செயலாளர் கண்டனம்

புதுடெல்லி: இஸ்ரோவிற்கு நேருவின் பங்களிப்பை சிலர் குறைகூறுவதாக செய்தி வெளியான நிலையில், அதற்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘முன்னாள் பிரதமர் நேரு, விஞ்ஞான, அறிவியல் வளர்ச்சியை ஊக்குவித்தார். இஸ்ரோவின் வளர்ச்சிக்காக அவரது பங்களிப்பை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) ஸ்தாபக நாளில் நேரு ஆற்றிய உரையை, இந்த பதிவுடன் இணைத்துள்ளேன். அதனை அவர்கள் (ஆளுங்கட்சி) கேட்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சந்திரயான்-3 வெற்றியை ஆளும் பாஜக தலைவர்கள் கொண்டாடி வரும் நிலையில், நேருவிற்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஜெய்ராம் ரமேஷ் நேருவின் பங்களிப்பு குறித்து பதிலடி பதிவு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

The post நேருவை குறை கூறுவதா?.. காங். பொதுச் செயலாளர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Nehru ,General Secretary ,New Delhi ,Jairam Ramesh ,ISRO ,Congress ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட...