×

பல்வேறு முக்கிய வழக்கில் தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி திடீர் ராஜினாமா

நாக்பூர்: மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதியான ரோகித் தேவ், கடந்த 2017ம் ஆண்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் 2025ம் ஆண்டு ஓய்வு பெறவிருந்தார்.மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட டெல்லி பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்து கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கினார். இது போல் பல முக்கிய வழக்குகளில் அவர் தீர்ப்பு வழங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் கூடியிருந்த வக்கீல்களுக்கு மத்தியில் அவர் பேசும்போது, தான் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்தார். சுயமரியாதைக்கு எதிராக தன்னால் பணியாற்ற முடியாது என்று நீதிபதி கூறியதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.

The post பல்வேறு முக்கிய வழக்கில் தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Bombay High Court ,Nagpur ,Rohit Dev ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...