×

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு இல்லை என அதிருப்தி; டிஜிபி ஆக.4ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு இல்லை என அதிருப்தி தெரிவித்து டிஜிபி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் மாநில டிஜிபி வரும் 4ம் தேதி மதியம் 2 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மணிப்பூர் டிஜிபி தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி சட்டம் – ஒழுங்கு பிரச்சனை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமளிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் காவல்துறையினர் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்துவிட்டனர். மணிப்பூர் மாநில டிஜிபி என்ன செய்து கொண்டு இருக்கிறார்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

The post மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு இல்லை என அதிருப்தி; டிஜிபி ஆக.4ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : manipur ,dgb ,Delhi ,Supreme Court ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...