×

மரண தண்டனையை நிறைவேற்ற மாற்று வழி குறித்து ஆராய விரைவில் நிபுணர்கள் குழு: ஒன்றிய அரசுக்கு அட்டர்னி ஜெனரல் கடிதம்

புதுடெல்லி: மரண தண்டனை குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு பதிலாக ஊசி மூலமாகவோ, மின்சாரம் பாய்ச்சியோ வலி இல்லாத மரண தண்டனையை நிறைவேற்ற மாற்று வழியை பரிசீலிக்கக் கோரி வக்கீல் ரிஷி மல்கோத்ரா என்பவர் உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டுமென நீதிபதிகள் பரிந்துரைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சோனியா மாத்தூர் ஆஜராகி, இந்த வழக்கை வாதாடி வரும் அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் தவிர்க்க முடியாத காரணத்தால் வர இயலவில்லை என தெரிவித்தார். மேலும், நிபுணர் குழு அமைப்பது தொடர்பாக அவர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post மரண தண்டனையை நிறைவேற்ற மாற்று வழி குறித்து ஆராய விரைவில் நிபுணர்கள் குழு: ஒன்றிய அரசுக்கு அட்டர்னி ஜெனரல் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Attorney General ,Union Govt. New ,Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது