சித்தூர் : சித்தூர் 50வது வார்டில் சிமெண்ட் சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. சித்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் அருணா தலைமை தாங்கி 50 வார்டுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.
50வது வார்டு பொதுமக்கள் அளித்த மனுவில், ‘எங்களது வார்டில் கடந்த 15 ஆண்டுகளாக சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். பலமுறை கவுன்சிலரிடம் புகார் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால், மாநகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் சிமெண்ட் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’ என அதில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்ற ஆணையாளர் ஓரிரு மாதத்திற்குள் சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும். கழிவுநீர் கால்வாய் வசதி அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.இதில் மாநகராட்சி திட்ட அதிகாரி கோவர்தன், சுகாதாரத்துறை அதிகாரி லோகேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post சித்தூர் 50வது வார்டில் சிமெண்ட் சாலை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
