×

சித்தூர் 50வது வார்டில் அடிப்படை வசதிகள் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

சித்தூர் : சித்தூர் 50வது வார்டில் அடிப்படை வசதிகள் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சித்தூர் முருகம்பட்டு அடுத்த 50வதுவார்டு நகர அப்போலோ காலனி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்ய கோரி அப்பகுதி பெண்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் 175 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் நாள்தோறும் அவதிகுள்ளாகி வருகிறோம். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அலுவலகத்திலும் எங்கள் வார்டு கவுன்சிலர் மற்றும் எம்எல்ஏயிடமும் பலமுறை புகார்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.

மேலும் இப்பகுதியில் கழிவு நீர் கல்வாய் வசதியில்லததால் மழைக்கலங்களில் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் வர காரணமாக உள்ளது.எனவே மாநகராட்சி ஆணையர் மற்றும் எம்எல்ஏ உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதிக்கு கழிவு நீர் கால்வாய் வசதி உட்பட அடிப்படை வசதிகள் அமைத்து தரவேண்டும். இல்லை என்றால் எங்கள் பகுதியை சேர்ந்த அனைத்து பெண்கள் ஒன்றிணைந்து கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post சித்தூர் 50வது வார்டில் அடிப்படை வசதிகள் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Chittoor 50th Ward ,Chittoor ,Chittoor Murugambathi ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...