×

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது வேதாந்தா தொழில் குழுமம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா தொழில் குழுமம் மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் 5 ஆண்டுகளுக்கு முன் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடி சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் காற்று, நீர் மற்றும் நிலம் மாசடைவதாகவும் மக்களுக்கு நோய் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.

The post தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது வேதாந்தா தொழில் குழுமம் appeared first on Dinakaran.

Tags : Vedanta Group of Industries ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...