×

புதிய நாடாளுமன்ற வீடியோ காட்சிகள் வௌியீடு; புதிய நாடாளுமன்றம் இந்தியர் அனைவருக்கும் பெருமை: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றம் இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அதிகாரப்பூர்வ முதல் வீடியோ காட்சியை பிரதமர் மோடி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வௌியிட்டார். அதில் நாடாளுமன்றத்தின் உட்புற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இத்துடன் பிரதமர் மோடி மக்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். அதில், “புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும்.

நான் உங்களிடத்தில் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இந்த வீடியோவுடன் புதிய நாடாளுமன்றம் குறித்த உங்கள் எண்ணங்களையும். கருத்துகளையும் உங்கள் குரலில் பதிவிட்டு அதிகம் பகிர வேண்டும். அப்படி நீங்கள் பதிவிடும் விடியோவை நான் ரீ-ட்வீட் செய்வேன். நீங்கள் வீடியோவை பகிரும்போது ‘எனது நாடாளுமன்றம் எனது பெருமை’ என்ற ஹேஷ்டேக்கை இணைக்க மறந்து விடாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

The post புதிய நாடாளுமன்ற வீடியோ காட்சிகள் வௌியீடு; புதிய நாடாளுமன்றம் இந்தியர் அனைவருக்கும் பெருமை: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : New Parliament ,PM Modi ,New Delhi ,Modi ,Parliament ,Indians ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...