×

தமிழ்நாடு முழுவதும் 25 டிஆர்ஓக்கள் மாற்றம்

சென்னை: தமிழ்நாடுமுழுவதும் 25 டிஆர்ஓக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை நில அளவை மற்றும் நிலவரி திட்ட அலுவலர் இந்துமதி, திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர்(நில எடுப்பு) பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த அனிதா, திருநெல்வேலி ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய ஆணையராகவும், அந்தப் பதவியில் இருந்த சுகன்யா, திருநெல்வேலி தாமிரபரணி-கருமேனியார்-நம்பியார் ஆற்று இணைப்புத் திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை பேரூராட்சிகளின் இணை இயக்குநராக இருந்த உமா மகேஸ்வரி ராமச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலராகவும், அந்தப் பதவியில் இருந்த சிவப்பிரியா, நாகப்பட்டினம் நுகர் பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளராகவும், இந்தப் பதவியில் இருந்த கண்ணகி, மதரை ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய ஆணையராகவும், இந்தப் பதவியில் இருந்த நர்மதா, மதுரை மேட்டுப்பட்டி தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநராகவும், இந்தப் பதவியில் இருந்த காமாட்சி கணேசன், தூத்துக்குடி சிப்காட் எண்ணெய் சுத்திகரிப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும்(நில எடுப்பு)மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரக கூடுதல் இயக்குநர் காந்திமதி, நீலகிரி மாவட்டம் கூடலூர் ஜென்மம் நிலங்கள் நில திட்ட அலுவலராகவும், திருநெல்வேலி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர்(நில எடுப்பு) ரேவதி, திருநெல்வேலி சிப்காட் சூரிய ஆலை உருவாக்கம் வருவாய் அலுவலராகவும், அந்தப் பதவியில் இருந்த விமல்ராஜ், மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராகவும், அந்தப் பதவியில் இருந்த முருகதாஸ், சென்னை பெருநகர மாநகராட்சி மண்டல அலுவலராகவும், அந்தப் பதவியில் இருந்த ஜெயச்சந்திரன், கோவை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை துணை ஆணையர்(கலால்), சுபா நந்தினி, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராகவும், இந்தப் பதவியில் இருந்த இராமேனுவல்ராஜ், திருவள்ளூர் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை துணை ஆணையர்(கலால்) வடிவேல் பிரபு, திருச்சி நெடுஞ்சாலை நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகு தனி மாவட்ட வருவாய் அலுவலாகவும், சென்னை நில நிர்வாக ஆணையரக இணை ஆணையர்(நில எடுப்பு), பிரியா, மின் ஆளுமை ஆணையரக இணை ஆணையராகவும்(தொழில் நுட்பம்), இந்தப் பதவியில் இருந்த வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராகவும், இந்தப் பதவியில் இருந்த சிவ ருத்ரய்யா, கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி கழக மாவட்ட வருவாய் அலுவலராகவும்(நில எடுப்பு) பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு மேலாண்மை இயக்குநர் மற்றும் வன்னியர் வாரியத்தை கூடுதலாக கவனித்து வந்த ராஜேந்திரன், இனி வன்னியர் நல வாரிய உறுப்பினர் செயலராக இருப்பார். முழு கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் மேலாண்மை இயக்குநராக இருப்பார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது மேலாளர்(நிர்வாகம்), சுகுமார், அதே பிரிவில் சந்தை பொது மேலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் நிர்வாகப் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருவார்.

கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, கோவை மாவட்ட வருவாய் அலுவலராகவும், அந்தப் பதவியில் இருந்த லீலா அலெக்ஸ், சென்னை வெளிவட்டச் சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும்(நில எடுப்பு), திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர்(நில எடுப்பு), சேக் முகையதீன், திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகவும், இந்தப் பதவியில் இருந்த லதா, சென்னை-கன்னியாகுமரி தொழில் முனையம்(சேலம்) தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும்(நில எடுப்பு) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post தமிழ்நாடு முழுவதும் 25 டிஆர்ஓக்கள் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chief Secretary ,Variyanbu ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...