- ஆந்திரா
- ஜோதி
- ஃபெடரேஷன் கோப்பை பெண்களுக்கான 100மீ தடை ஓட்டம்
- ராஞ்சி
- ஜோதி ராஜு
- தடகள தேசிய கூட்டமைப்பு
- ஃபெடரேஷன் கோப்பை பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம்
ராஞ்சி: தேசிய பெடரேஷன் தடகள போட்டியில் ஆந்திர வீராங்கனை ஜோதி ராஜு 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார். 26-வது தேசிய பெடரேசன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆந்திர வீராங்கனை ஜோதி புதிய சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 12.89 வினாடியில் கடந்தார். இன் படி, இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) அமைத்த 13.43 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.
தனது சாதனையை முறியடித்து ஜோதி புதிய சாதனை நிகழ்த்தினார். மேலும் தமிழக வீராங்கனை நித்யா 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் பந்தய தூரத்தை 13.44 வினாடியில் கடந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சப்னாகுமாரி 13.58 வினாடி யில் கடந்த வெண்கல பதக்கம் வென்றார். வட்டு எறியும் போட்டியில் மத்திய பிரதேச வீராங்கனை ஷாலினி சவுத்ரி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் மராட்டியத்தை சேர்ந்த தேஜஸ் அசோக்கும், சங்கிலி குண்டு எறிதல் பஞ்சாப்பை சேர்ந்த தம்ஜீத் சிங்கும் தங்கம் வென்றனர்.ஜோதி 89 வினாடிகளில் இலக்கை அடைந்து ஆசிய தடகள போட்டிக்கும் அவர் தேர்வானார்.
The post பெடரேஷன் கோப்பை பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆந்திர வீராங்கனை ஜோதி புதிய சாதனை..!! appeared first on Dinakaran.
