- மத்திய அமைச்சர்
- மியான்மர் எல்லைப் பகுதி
- புது தில்லி
- பெக் மாவட்டம்
- நாகாலாந்து
- மியான்மர்
- எல்.முருகன்
- தின மலர்
![]()
புதுடெல்லி: மியான்மர் எல்லையில் உள்ள நாகலாந்தின் பெக் மாவட்டம், அவங்குக்கு சென்ற முதல் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆவார். அண்டை நாடான மியான்மரின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள நாகலாந்தின் பெக் மாவட்டம் அவகுங் கிராமத்தில் சர்வதேச வர்த்தக மைய கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்க ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சென்றுள்ளார். இதன் மூலம் அவங்குக்கு சென்ற முதல் ஒன்றிய இணை அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அங்கு புச்சூரி பழங்குடியினரின் பாரம்பரிய நடனத்தில் அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று அவர்களுடன் சேர்ந்து நடமாடினார். இது குறித்து அமைச்சர் எல்.முருகன் தனது டிவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கான மிகப்பெரிய தொலை நோக்கு பார்வை கொண்டவர். நாகாலாந்தில் உள்ள அவகுங் கிராமத்தில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் தொலைதூர, பழங்குடியினர், எல்லையோர கிராமங்கள் பிரதமர் மோடியின் உள்ளடக்கிய வளர்ச்சியின் பார்வையில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளன. நாகாலாந்தின் செசெசு கிராமத்தில் உள்ள நேதாஜி சிகரத்தைச் சேர்ந்த இந்தியாவின் மகத்தான மகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறி உள்ளார்.
The post மியான்மர் எல்லை பகுதிக்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பயணம் appeared first on Dinakaran.
