
அயோத்தி: அயோத்தியில் இருந்து வரும்போது புது சக்தியுடன் நான் திரும்பி வருவேன். வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் மகாராஷ்டிரா முழுவதும் பாஜ – சிவசேனாவில் காவிக்கொடிதான் பறக்கும் என, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ராமர் கோயில் செல்லவும், சரயு நதியில் பூஜைகள் மேற்கொள்ளவும் அயோத்திக்கு சென்றிருந்தார். அங்கு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பா.ஜவுடன் எங்கள் சிவசேனா கட்சி கூட்டணி வைத்துள்ளது. நமது சித்தாந்தமான இந்துத்துவாவும் இதுவும் ஒன்றுதான். அயோத்தியில் இருந்து புதிய சக்தியுடன் எங்கள் மாநிலத்திற்கு சென்று மக்களுக்கு சேவை செய்வோம். 2024ம் ஆண்டில், சிவசேனா மற்றும் பாஜகவின் காவிக்கொடி மாநிலம் முழுவதும் பறக்கும். இவ்வாறு ஷிண்டே கூறினார். அயோத்தியில் ராமரை வணங்கி, கோயில் கட்டுமானப் பணிகளை ஷிண்டே பார்வையிட்டார். ஹனுமன்கர்ஹியில், கோயிலில் மஹந்த் ராஜு தாஸ் ஒரு கவசத்தை வழங்கினார்.
The post வரும் 2024ம் ஆண்டில் மகாராஷ்டிரா முழுவதும் காவிக்கொடி பறக்கும்: ஏக்நாத் ஷிண்டே பேட்டி appeared first on Dinakaran.
