×

கட்சியில் உறுப்பினராவே இல்லை… ஆனா அவருக்கு எம்எல்ஏ சீட்? தவெகவில் காமெடி

 

தவெக சார்பில் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக தற்போது மாவட்ட செயலாளராக இருக்கும் கில்லி டி.சரத்குமார் அறிவிக்கப்படுவார் என அனைத்து நிர்வாகிகளும் எதிர்பார்த்து வருகின்றனர். தாம்பரம் தொகுதியில் வன்னியர் சமூக வாக்குகள் கணிசமான அளவில் இருப்பதால் அந்த சமூகத்தை சேர்ந்த டி.சரத்குமாருக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ரசிகர் மன்றம் முதல் மக்கள் இயக்கம், தற்போது தமிழக வெற்றிக் கழகம் வரை தொடர்ந்து அனைத்திலும் டி.சரத்குமார் பயணித்து வருகிறார்.

ஆனால், கட்சியில் அடிப்படை உறுப்பினரே இல்லாத மினரல் வாட்டர் தொழிற்சாலை நடத்தி வரும் யாதவர் சமூகத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு தவெக தலைமை எம்எல்ஏ சீட் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு அக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ‘‘பணம் வைத்திருக்கிறார் என்பதற்காக மட்டும் சீட் கொடுத்தால் தொகுதியில் எப்படி ஜெயிக்க முடியும். கட்சிக்காக பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து, பாடுபட்டவர்களுக்கு வாய்ப்பு இல்லையா’’ என தவெக நிர்வாகிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags : MLA ,Thaveka ,Gilli T. Sarathkumar ,Tambaram ,Vanniyar ,
× RELATED சொல்லிட்டாங்க…