×

ரூ.17 கோடி ஒரு தரம் ரெண்டு தரம் மூணு தரம்: எம்எல்ஏ சீட்டை ஏலம் விட்ட அதிமுக மாவட்ட செயலாளர்

தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் பிரபு, அழகுவேலுபாபு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தங்கபாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ராஜீவ்காந்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மணி, சின்னசேலம் தொழிலதிபர் ஜெயவேல் உள்ளிட்ட பலர் கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தொகுதி வாரியாக விருப்ப மனு அளித்தவர்களை மாவட்ட செயலாளர் குமரகுரு நேரில் அழைத்து, தேர்தல் செலவு செய்ய கூடிய விவரத்தை கேட்டறிந்துள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் ரூ.17 கோடி செலவு செய்ய வேண்டும். அதற்கு யார் தயாராக உள்ளீர்கள் என கேட்டதாக கூறபடுகிறது. அதில் ஒரு சிலர், ஒரு கோடி அல்லது இரண்டு கோடி ரூபாய் செலவு செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதில் ஒரு சிலர், செலவு எதுவும் செய்ய முடியாது, வாய்ப்பு இருந்தால் கட்சி தலைமை செலவு செய்தால் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் பலர் ரூ.17 கோடிக்கும் மேல் பணம் செலவு செய்ய தயாராக இருப்பதாக ஓப்பனாக தெரிவித்ததால் போட்டி அதிகரித்ததுள்ளது.

இதையடுத்து போட்டியின்றி ஒருவரை தேர்வு செய்ய மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது. அதில் அதிக பணம் செலவு செய்ய விருப்பம் உள்ளவர்களின் பெயர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாமா என நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, அதனை ஏற்க மறுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட செயலாளர் குமரகுரு, தனக்கு சாதகமான ஒருவரை தேர்வு செய்ய இதுபோன்ற உத்தியை கையில் எடுத்ததாகவும், இதேபோன்று மாவட்ட செயலாளர் பதவியையும் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய கட்சி தலைமை ஏற்குமா அல்லது மாவட்ட செயலாளர் குமரகுரு சம்மதிப்பாரா என கூறி அதிமுக நிர்வாகிகள் பலர் விமர்சனம் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் மாவட்ட கழகத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய ஏலம் விடப்படும் விவகாரம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Adimuga District ,MLA ,Tamil Nadu ,Sentilkumar ,Prabhu ,Ahakuvelubabu ,District MGR Council ,Tangabandian ,
× RELATED மோடி, அமித்ஷா சொன்னாங்க.. செஞ்சேன்…