கோபி அருகே உள்ள நம்பியூரில் முக்கிய பிரமுகர்களை நேற்று சந்தித்து ஆதரவு திரட்டிய தவெக பொறுப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், ‘‘இது வரை எல்லோரும் எப்படி உறுதுணையாக இருந்தீர்களோ அது போல் ஆதரவு தந்தால் கோபி சட்டமன்ற தொகுதியின் சரித்திர வரலாற்றில் 10வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வரலாற்றை படைப்பேன். பொறுப்பிற்கு வரும் போது பணிகளை சிறப்போடு செய்வேன். அதற்கு உங்கள் அனைவரது நல்லாசியும், ஒத்துழைப்பும் இருந்தால் மட்டும் தான் சாதிக்க முடியும்’’ என்றார்.
அதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பொதுமக்களிடம் கெஞ்சும் வகையில் அவர் பேசியதை ‘‘எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே’’ என்று மக்கள் நக்கலாக பேசி சென்றனர். முன்னதாக கோவை விமானநிலையத்தில் செங்கோட்டையனிடம், ஆதவ் அர்ஜூனா ரஜினியை விமர்சனம் செய்து பேசியது குறித்து சேகர் பாபு அளித்த பதில் தொடர்பாக நிருபர்கள் கேள்வியை எழுப்பினர். ஆனால் எந்த கருத்துக்கும் நான் பதில் சொல்லவில்லை என கூறி இரண்டு கைகளையும் எடுத்து கும்பிட்டு காரில் ஏறி செங்கோட்டையன் புறப்பட்டு சென்றார். செங்கோட்டையன் செய்த ரியாக்ஷன் சமூகவலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.
