×

நயன்தாரா குறித்து அவதூறாக பேசிய சி.வி.சண்முகத்தை பழனிசாமியால் நீக்க முடியாதது ஏன்? வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் கேள்வி

சென்னை: நயன்தாராவை பற்றி தவறாக பேசிய நடிகர் ராதாரவியை தளபதி 24 மணி நேரத்தில் திமுக கட்சியை விட்டு நீக்கினார். சி.வி.சண்முகத்தை பழனிசாமியால் நீக்க முடியாததது ஏன் என்று திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல, ராஜ்யசபா உறுப்பினராக உள்ள சி.வி.சண்முகத்திற்கு நயன்தாரா வேண்டுமாம், மற்றவர் மனைவியை நினைத்துக் கூட பார்க்க முடியாது, பார்க்க கூடாது. ஆனால் இவருக்கு நயன்தாரா வேண்டுமாம். இந்த கேவல செயலுக்கு கிருஷ்ணர் தூது ஆஞ்சநேயர் தூது போல அரசாங்கம் முதல்வர் தூது செல்ல வேண்டுமாம்.

எந்த மனிதரும், மந்திரியும் பேசக்கூடாது. அதிலும் சட்ட அமைச்சராக இருந்த ஒருவர், ஓட்டு கேட்பார் என்று பார்த்தால் நயன்தாராவை கேட்டு வருகிறார். தமிழர்களை தலைகுனிய வைத்து விட்டார். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்படி பேசியதற்காக சி.வி.சண்முகத்தை அதிமுகவிலிருந்து பழனிசாமி நீக்கி இருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் நோட்டீஸாவது விட்டு இருக்கலாமே? கேவலமாக பேசி பெண்களை அசிங்கப்படுத்திய சி.வி.சண்முகத்தை நீக்க முடியாதா, பெண்கள் உள்ளாடை வாங்கி கேட்டதாக பேசிய திண்டுக்கல் சீனிவாசனை நீக்க முடியாதா?.

ராதாரவி ஒரு திரைப்பட விழாவில் ‘‘சீதையாக நடிப்பதற்கு புதிதாக வருபவர்களுக்கு தான் தகுதி உண்டு. நயன்தாரா போல் திரை உலகில் இப்போது இருப்பவர்களுக்கு தகுதி இல்லை’’ என்றவுடன், பேசியவர் ஒவ்வொரு கூட்டத்திற்கும் பல நூறு, பொதுமக்களை வேன் இல்லாமலே ஈர்த்து வருகிற நடிகர் எம்.ஆர். ராதா மகன், நல்ல பேச்சாளர் என்றாலும் உடனடியாக கட்சியை விட்டு நீக்கினார் தளபதி. ஆனால் எடப்பாடி பழனிசாமியால், சி.வி.சண்முகத்தை ஏன் நீக்க முடியவில்லை? அதிமுக கப்பல் மூழ்கும் அளவு தொண்டர்கள், திமுகவுக்கு ஏன் வருகிறார்கள் என்பது இந்த சம்பவத்தை பார்த்தால் புரிகிறது. கூவத்தூரில் நடந்த கூத்தை சி.வி.சண்முகம் கக்கி விடுவாரோ என்கிற பயம் வந்துவிட்டதா எடப்பாடி பழனிசாமிக்கு.

இலங்கை, நேபாளம் போல், தமிழகத்தில் பூகம்பம் வெடிக்கும் என கூறிவிட்டு மன்னிப்பு கேட்ட ஆதவ்வை, ரஜினியை பயந்தாங்கொள்ளி என கேவலமாக பேசிய ஆதவ்வை, விஜய் கண்டிக்காதது ஏன்? ஊர் கூடி உதைத்த பின்தான் ஆதவ் மன்னிப்பு கேட்டாரே தவிர, விஜய் சொல்லி மன்னிப்பு கேட்டாரா? இல்லை. குறைந்தபட்சம் ஆதவ்வை சஸ்பெண்ட் கூட ஏன் செய்யவில்லை விஜய். ஆதவ்வின் பணத்திற்காகவா? ஒவ்வொரு கூட்டத்திற்கும் செலவு செய்வது ஆதவ் இல்லை, நான்தான் என விஜய் நிரூபிக்க தயாரா? விற்பனையில் லாட்டரியில் குறிப்பிட்ட எண்களை காட்டிலும் அதிகமாக அடிக்க வேண்டியது.

விற்காத எண்களை விற்றதாக சொல்லி கிழித்து விட்டு கிழித்த லாட்டரிக்கு பரிசு விழுந்ததாக பொய் சொல்லி பரிசையும் கொடுப்பதில்லை. அடுத்தவரின் பணத்தில் இப்போது த.வெ.க. கட்சியை ஆதவ் நடத்துகிறார். நல்லவேளை, கொள்கை சிங்கம் திருமா தப்பித்துக் கொண்டார். நடிகர் விஜய் மாட்டிக் கொண்டார். மாமியார் ஒரு கட்சி, மச்சான் ஒரு கட்சி, ஆதவ் ஒரு கட்சி, ஒரே குடும்பம் ஒரு கட்சியில் உண்டு. அதை குடும்ப அரசியல் என்கிறார்கள். குடும்பத்தில் ஆளுக்கொரு கட்சி என்பது யாரை ஏமாற்ற. இவ்வாறு காசி முத்துமாணிக்கம் கூறியுள்ளார்.

Tags : Nayandara ,C. ,PALANISAMI ,SHANMUGATH ,Kassi Muthumanikam ,Chennai ,Radaravi ,Dimuka ,Nayantara ,Timuka ,Kavingar Kashimutumanickam ,Sanmughat ,
× RELATED மோடி, அமித்ஷா சொன்னாங்க.. செஞ்சேன்…