- புதுச்சேரி
- தில்லி
- என்ஆர் காங்கிரஸ்-16
- பாஜக-10
- அதிமுக-2
- எல்ஜேபி-2
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- NR காங்கிரஸ்
- பி.ஜே.பி கூட்டணி
- அஇஅதிமுக
- பா.ம.க.
புதுச்சேரியில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலாம் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் அடங்கும். இதே கூட்டணி இந்த தேர்தலிலும் தொடரும் என அறிவித்தனர். கடந்த 13ம் தேதி தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, என்.ஆர்.காங்கிரசுக்கு 16, பாஜவுக்கு 14 என்று பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா அறிவித்தார்.
பாஜவிடம் உள்ள 14 தொகுதிகளில் அதிமுக 2 சீட், புதிதாக லாட்டரி அதிபர் மார்டின் மகனின் லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், திடீரென முதல்வர் ரங்கசாமி, பாஜவுடன் கூட்டணியை தொடர வேண்டும் என்றால், புதுவைக்கு மாநில அந்தஸ்து மற்றும் லாட்டரி அதிபர் மார்டின் மகனான ஜோஸ் சார்லசின் லஜக கட்சியை புதுவையில் இருந்து அகற்ற வேண்டும் என கண்டிஷன் வைத்தார். இதனால், பேச்சுவார்த்தை வந்த ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான குழு அப்செட்டாகி, அவசர, அவசரமாக டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் புகார் அளித்தது.
பாஜவை மண்டகாய வைத்த முதல்வர் ரங்கசாமி, தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இந்த பரபரப்புக்கு இடையே, வழக்கம்போல் உத்தரவு வாங்க சேலம் அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு சென்றார். பாஜவால் ஏற்பட்ட மனஉளைச்சலால் சாமிக்கு வாயில் பீடி பற்ற வைத்து சிறப்பு பூஜை செய்தார்.
வேட்பாளரை பட்டியலையும் வைத்து வணங்கிவிட்டு புதுச்சேரி திரும்பினார். டெல்லியில் ஆலோசனை நடத்தி மீண்டும் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அமைச்சர் தலைமையிலான குழு நேற்று முன்தினம் வந்தது. ஆனால், அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, திருச்செந்தூர் முருகன் கோயில் சாமி தரிசனம் செய்தார். தல்வர் ரங்கசாமி இருந்தபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரிடம் போனில் பேசி மிரட்டி கூட்டணியை இறுதி செய்தார்.
அப்போது, ரங்கசாமியை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா போனில் தொடர்பு கொண்டு, மிரட்டி கூட்டணியை இறுதி செய்தார். பின்னர், நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்று மதியம் புதுச்சேரிக்கு வந்தார். பின்னர், கதிர்காமம் முருகன் கோயிலில் சென்ற முதல்வர் ரங்கசாமி, தனது வேட்புமனு வைத்து வணங்கிவிட்டு மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, தனியார் ஓட்டலில் தங்கியிருந்த ஒன்றிய அமைச்சரும், மேலிட பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியாவை சந்தித்து பேசினார். இதில் தொகுதி பங்கீடு, லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணிக்குள் இணைப்பதற்கு ஒப்புக்ெகாண்டார். இதையடுத்து, என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகள், பாஜவுக்கு 14 தொகுதிகள் என இறுதி செய்யப்பட்டது.
