×

புதுச்சேரியில் 17 இன்ஸ்பெக்டர்கள், 29 எஸ்ஐக்கள் அதிரடி இடமாற்றம்

புதுச்சேரி, பிப். 21: புதுச்சேரி காவல் நிலையங்களில் பணிபுரியும் 17 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, முத்தியால்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தனசேகரன் புதுச்சேரி ஆயுதப்படைக்கும், ஐஜி செயலாளர் தனசெல்வம் முத்தியால்பேட்டைக்கும், சபாநாயகரின் பாதுகாப்பு அதிகாரி பிரபாகரன் புதுச்சேரி கலால் துறைக்கும், கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சபாநாயகரின் பாதுகாப்பு அதிகாரியாகவும், புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து நாகராஜன் கோரிமேடு காவல் நிலையத்துக்கும், சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ஏழுமலை பிசிஆர் பிரிவுக்கும், முதலியார்பேட்டை கண்ணன் சிபிசிஐடி பிரிவுக்கும், அரியாங்குப்பம் ஆறுமுகம் முதலியார்பேட்டைக்கும், புதுச்சேரி ஆயுதப்படை (கூடுதலாக பிசிஆர் பிரிவு) கிட்ல சத்யநாராயணா அரியாங்குப்பத்துக்கும், காரைக்கால் டவுன் காவல் நிலைய புருசோத்தமன் லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை வெங்கடாஜலபதி கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்துக்கும், கலால் துறை அறிவுசெல்வன் காரைக்கால் டவுன் காவல் நிலையத்துக்கும், கோட்டுச்சேரியில் பணிபுரியும் சிக்மா நுண்ணறிவு இன்ஸ்பெக்டர் மர்தினி ஆயுதப்படைக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை ராமு சிக்மா நுண்ணறிவு பிரிவுக்கும் (பணி-கோட்டுச்சேரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர்), திருநள்ளாறு காவல் நிலையத்தில் பணிபுரியும் சிக்மா செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி டி.ஆர்.பட்டினம் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகவும், காரைக்கால் சிறப்பு பிரிவு பிரவின்குமார் சிக்மா செக்யூரிட்டி பிரிவுக்கும் (பணி-திருநள்ளாறு காவல்நிலையம்), டி.ஆர்.பட்டினம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மேரி கிறிஸ்டியன் (எ) பால் சிறப்பு பிரிவு மற்றும் காரைக்கால் கடலோர காவல் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல், 29 சப்-இன்ஸ்பெக்டர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கோரிமேடு எஸ்ஐ ரமேஷ் மேட்டுப்பாளையத்துக்கும், ஒதியஞ்சாலை ராஜன் கோரிமேட்டுக்கும், தவளக்குப்பம் ஜெயகுருநாதன் ஒதியஞ்சாலைக்கும், கிருமாம்பாக்கம் விஜயகுமார் தவளக்குப்பத்திற்கும், புதுச்சேரி ஆயுதப்படை சண்முகசத்யா கிருமாம்பாக்கத்துக்கும், பாகூர் நந்தகுமார் முத்தியால்பேட்டைக்கும், மேட்டுப்பாளையம் சிவகுமார் பாகூருக்கும், திருபுவனை கதிரேசன் புதுச்சேரி கடலோர காவல் பிரிவுக்கும், சேதராப்பட்டு ராஜேஷ் திருபுவனைக்கும், காலாப்பட்டு குமார் கோட்டுச்சேரிக்கும், முத்தியால்பேட்டை சிவபிரகாசம் காலாப்பட்டுக்கும், கோட்டுச்சேரி சுரேஷ் திருநள்ளாறுக்கும், முதலியார்பேட்டை ஷேக் அலாவுதீன் சேதராப்பட்டுக்கும், லாஸ்பேட்டை குமார் ஏனாம் கடலோர காவல் பிரிவுக்கும், புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய சத்தியா பெரியகடைக்கும், புதுச்சேரி சிக்மா செக்யூரிட்டி மேரி பிரான்சிஸ்கா புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், காரைக்கால் டவுன் காவல் நிலைய அந்தோணி மற்றும் ராஜகணபதி பெரியகடைக்கும், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு புறக்காவல் நிலைய தமிழரசன் மாகே கடலோர காவல் பிரிவுக்கும் (பணி-பந்தக்கல் புறக்காவல் நிலையம்), மாகே கடலோர காவல் பிரிவு (பணி-பந்தக்கல் புறக்காவல் நிலையம்) ஹரிதாஸ் லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு காவல் நிலையத்துக்கும், உருளையன்பேட்டை ஆர்.சந்திரசேகரன் ஒதியஞ்சாலைக்கும், காரைக்கால் டவுன் காவல் நிலைய மோகன் உருளையன்பேட்டைக்கும், மாகே ஜெயசங்கர் காரைக்கால் டவுன் காவல் நிலையத்துக்கும், புதுச்சேரி தெற்கு போக்குவரத்து பாஸ்கரன் வடக்கு காவல் நிலையத்துக்கும், லாஸ்பேட்டை திருநாவுக்கரசு ஏனாம் போக்குவரத்து காவல் நிலையத்துக்கும், கரையாம்புத்தூர் புறக்காவல் நிலைய ஜெ.சந்திரசேகரன் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல் தலைமையக எஸ்.பி. மோகன்குமார் வெளியிட்டுள்ளார்.

Tags : Puducherry ,Muthialpet ,Inspector ,Dhanasekaran ,Puducherry Armed Forces ,IG ,Dhanaselvam Muthialpet ,Speaker ,Security ,Prabhakaran ,Puducherry Excise Department ,
× RELATED வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய 14 விதிகள்