×

முள்ளாட்சி மாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

 

திருத்துறைப்பூண்டி, மார்ச் 17: திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா நடந்தது. இதில் 2000 பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் பிரசித்திபெற்ற முள்ளாட்சி மாரியம்மன் கோயில் 82ஆம் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 1ம்ந்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஒவ்வெரு நாளும் உபயதாரர்கள் சார்பில் சிறப்பு வாகனத்தில் சாமி விதியுலா நடைபெற்றது. நேற்று முன்தினம் முக்கிய திருவிழாவான காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல், முடி எடுத்துக்கொள்ளுதல், அபிஷேகம், ஆராதனை இன்னும் இதர பிரார்த்தனைகள் நடைபெற்றது.

Tags : -beating ,Mullatchi Mariamman Temple ,Thiruthuraipoondi ,Mullatchi ,Mariamman ,Temple ,Thiruvarur district ,
× RELATED திமுக பிரமுகர் மகன் உயிரிழப்பு