திருச்சி, மார்ச் 17: திருச்சி எஸ்பி வெளியிட்ட செய்தி குறிப்பு: திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம் பெரிய கருப்பூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், ஜீயபுரம் உட்கோட்ட காவல் ஆளிநர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 150 காவல் ஆளிநர்ககுக்கு எஸ்பி செல்வநாகரத்தினம் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
முக்கிய அறிவுரைகள் பொதுமக்கள் அணுகுமுறை: காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களை நல்ல முறையில் வரவேற்று, அவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது.
