×

வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய 14 விதிகள்

 

திருச்சி, மார்ச்.17: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய 14 விதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சரவணன் அறிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 வரும் ஏப்.24 அன்று நடைபெறும் என அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 785 வாக்குச்சாவடி மையங்கள், ஆயிரத்து 226 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. கடந்த பிப்.2 அன்று வெளியிட்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி திருச்சி மாவட்டத்திலுள்ள 9 எம்எல்ஏ தொகுதிகளிலும் 10 லட்சத்து 31 ஆயிரத்து 354 ஆண் வாக்காளா்களும், 10 லட்சத்து 94 ஆயிரத்து 642 பெண் வாக்காளா்களும், 307 இதர வாக்காளா்களும் என மொத்தம் 21 லட்சத்து 26 ஆயிரத்து 303 வாக்காளா்கள் உள்ளனா்.

Tags : Trichchi ,District Election Officer ,District Collector ,Saravan ,Election Commission of India ,Tamil Nadu Assembly General Election 2026 ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து சிலிண்டருக்கு பாடைகட்டி ஆர்ப்பாட்டம்