×

தஞ்சையில் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்

 

தஞ்சாவூர், மார்ச் 17: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் கட்சியின் சுவர் விளம்பரங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.தலைவர்களின் சிலைகள் சாக்குகளால் மூடப்பட்டு வருகின்றன.
அதன்படி, தஞ்சையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து கட்சியின் விளம்பர பதாகைள் அகற்றப்பட்டு வருகிறது. சுவர் விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை கீழ் பாலத்தில் சுவரில் வரையப்பட்டிருந்த கட்சியின் விளம்பரங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் உத்தரவுபடி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அழித்தனர்.

Tags : Thanjavur ,Tamil Nadu ,
× RELATED திமுக பிரமுகர் மகன் உயிரிழப்பு