நெல்லையில் புதிய தமிழகம் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் கூட்டணி குறித்து கட்சியின் உயர்மட்டக் குழுவினர் கள அளவில் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த அறிக்கை வரும் 11ம் தேதி சமர்ப்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, கண்டிப்பாக வரும் 14ம் தேதிக்குள் கூட்டணி குறித்து இறுதி முடிவு எட்டப்படும். கூட்டணி பேச்சுவார்த்தைக்காக புதிய தமிழகம் கட்சி கதவை திறந்து வைத்திருக்கிறது.
நல்ல காற்று வந்தால் திறப்போம். மோசமான காற்றை மூடிவிடுவோம். தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். எங்க கட்சிக்கு 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் வலுவான வாக்கு வங்கி உள்ளது. நெல்லை, நாங்குநேரி தொகுதிகளில் வலுவாக உள்ளோம். எனவே இவ்விரு தொகுதிகளில் ஒன்றை கேட்டுப் பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
