×

அரியலூர் அரசு கல்லூரியில் நாட்டுநல பணித்திட்டநாள் விழா

அரியலூர், செப். 25: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்ட நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் (பொ) ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற தன்னார்வ பணிகளில் ஈடுபடும் போது உங்களுடைய ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். மாணவப் பருவத்தில் கல்வியோடு நீங்கள் ஆற்றும் தொண்டு போற்றுதலுக்குறியது என்றார். பின்னர் சிறப்பாக செயலாற்றிய தொண்டர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் கருணாகரன், 1969ம் ஆண்டு செப்டம்பர் 24ம் நாள் அப்போதைய ஒன்றிய அரசால் தோற்றுவிக்கப்பட்ட இத்திட்டம் கடந்து வந்த வரலாற்றினையும் அதன் சாதனைகளையும் எடுத்துக்கூறினார்.  இதைத்தொடர்ந்து, அமைப்பில் சேர்ந்த புதிய தொண்டர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக என்.எஸ்.எஸ் 2 அலகு அலுவலர் பன்னீர்செல்வம் வரவேற்றார். முடிவில் அலகு 3 அலுவலர் மேரிவைலட் கிருஸ்டி நன்றி கூறினார்.

 

Tags : National Service Day ,Ariyalur Government College ,Ariyalur ,Ariyalur Government Arts and Science College ,Principal ,P) Ravichandran ,
× RELATED மூதாட்டிகளிடம் சில்மிஷம் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது