சிவகங்கை, டிச.19: சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதி குறைப்பை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சஞ்சய் தலைமை வகித்தார். காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி அப்பச்சிசபாபதி பேசினார். இதில்,வட்டார காங்கிரஸ் தலைவர்கள் மதியழகன், உடையார், வேலாயுதம் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
