- ராஜராஜன் காலெஜ்
- காரைக்குடி
- ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- அமராவதிபுதூர்
- முதல்வர்
- முத்துக்குமார்
- டாக்டர்
- எஸ். சுப்பையா
காரைக்குடி, டிச.19: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் முத்துக்குமார் வரவேற்றார். முன்னாள் துணைவேந்தர், கல்விகுழும ஆலோசகர் முனைவர் எஸ்.சுப்பையா தலைமை வகித்து முகாமை துவக்கிவைத்து பேசுகையில், ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் நிச்சயம் வேலைவாய்ப்பு பெற்று தர வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். தலைசிறந்த தனியார் நிறுவனங்களை அழைத்து வந்து முகாம்கள் நடத்தி தேர்வு பெறுபவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்குகிறோம்.
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு வகையில் வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. ஆனால் கல்வியோடு வேலைவாய்ப்பு வழங்க கூடிய திறன்களை மாணவர்கள் பெற வேண்டும் என நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றனர். மாணவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது. இந்த முகாமில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவை சேர்ந்த 33 மாணவர்கள் தேர்வாகி உள்ளது பாராட்டக்கூடியது என்றார்.
கல்லூரி டீன் சிவக்குமார், தனியார் நிறுவன பொது மேலாளர் ராஜ்கண்ணன், புருஷோத்தம் ஆகியோர் மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தினர். இயந்திரவியல் துணை தலைவர் பேராசிரியர் கார்த்திகேயன், எலக்ட்ரிக்கல் துறை தலைவர் பேராசிரியர் ஷிபா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
