×

மூதாட்டிகளிடம் சில்மிஷம் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது

கெங்கவல்லி, டிச.19: வீரகனூர் அருகே புளியங்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் மஞ்சுப்பன் மகன் இளையராஜா(32). இவர், கடந்த 15ம் தேதி இரவு 11 மணியளவில், குடிபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள்(70) என்பவரிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் சத்தம் போடவே தப்பியோடிய அவர், அதே பகுதியில் திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த விஜயா(58), பூங்காவனம்(62) ஆகியோரிடமும் தகாத முறையில் நடக்க முயன்றார். அவர்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பியோடிய இளையராஜாவை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து, வீரகனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில், படுகாயமடைந்த இளையராஜாவை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து செல்லம்மாள் கொடுத்த புகாரின்பேரில், இளையராஜா மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர்.

Tags : Kengavalli ,Ilayaraja ,Manchupan ,Puliyangurichi ,Weeraganur ,Chalammal ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்