×

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் நாளை மறுநாள் இலவச மருத்துவ முகாம்

தேனி, டிச. 19 : தேனியில் உள்ள தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில், தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சார்பில், நாளை மறுநாள் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாம் நடக்க உள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்கு இலவசமாக ரத்தப்பரிசோதனை, சர்க்கரையின் அளவு மற்றும் தேவைப்படுவோருக்கு இலவசமாக இசிஜி, வயிறு ஸ்கேன், யூரோபிளோமெட்டரி எனப்படும் சிறுநீரின் அளவு, வேகம், நேரம் கண்டறியும் பரிசோதனை பார்க்கப்பட உள்ளது. 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்க மருத்துவர் ஆலோசனைக்கு பின்னர் தேவைப்பட்டால் கர்ப்ப பை வாய் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை இலவசமாக பார்க்கப்பட உள்ளது.

முகாமில் கலந்து கொள்ள உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு நார்மல் டெலிவரியாக இருந்தாலும் அல்லது சிசேரியனாக இருந்தாலும் ரூ.25 ஆயிரம் மட்டும் செலுத்தி சிறப்பு பிரசவ திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். மருத்துவ பரிசோதனைகளக்கு பின் அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை திட்டத்தில் பயன்பெறலாம். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் செய்து வருகிறது.

Tags : Theni Nattathi Nadar Hospital ,Theni ,Fertility Center ,
× RELATED மூதாட்டிகளிடம் சில்மிஷம் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது