- ஓய்வூதியம் சங்கம்
- விருதுநகர்
- ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியதாரர்கள் சங்கம்
- விருதுநகர் கலெக்டர்
- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அனைத்து ஓய்வூதியதாரர்கள் சங்க மாவட்டம்
- ஜனாதிபதி
- எலங்கோ
விருதுநகர், டிச.19: 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட தலைவர் இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறையை கைவிட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுக்கு உதவி பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதித்திட வேண்டும்.
அரசுத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியப்பணி ஓய்வூதியர்கள் அனைவருக்கும் விடுதலின்றி மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றியப்பணி ஓய்வூதியர்களின் வைப்பு நிதித் தொகைக்கான வட்டித்தொகையை தாமதமின்றி வழங்க வண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதம் ஓய்வூதியமாக அனுமதித்து ஆணையிட வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
