50 நாள்ல சொர்க்கத்தை காட்டுறேன் என்றார் மோடி; பணம் இல்லாம செத்து சொர்க்கம் போனதுதான் மிச்சம்.! சீமான் செம தாக்கு

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ்குமாரை ஆதரித்து, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது: தனித்து நிற்கிறோம், தனித்துவத்தோடு நிற்கிறோம். தமிழ் மக்கள் எங்களை கைவிட மாட்டார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. அபரிமிதமான விலையேற்றம், வரிச்சுமை, அரிசி, பருப்பு விலைவாசி உயர்வு என மக்கள் மீது வாழ முடியாத சுமைகளை திணித்து வாழ்வதே கடினம் என்ற நிலைக்கு தள்ளி விட்டனர். 10 ஆண்டுகள் இந்தியாவை பாஜக ஆண்டது.

அவர்கள் நமக்கு செய்தது என்ன. ரூபாய் நோட்டு எல்லாம் செல்லாது என்று அறிவித்தார்கள். 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு சொர்க்கத்தை காட்டுகிறேன் என்று மோடி இனிப்பு வார்த்தைகளால் பேசி மயக்கினார். இங்கே பணம் இல்லாமல் செத்துபோய் சொர்க்கத்திற்கு போனதுதான் மிச்சம். வருவாய் பெருக்க அவர்களிடம் ஒரு வழியும் இல்லை. ஜி.எஸ்.டி.யால் ஒரு பலனும் இல்லை. ஒரு குட்டி நாடு கூட சொந்தமாக விமானம் வைத்துள்ளது. ஆனால், ஒரு துணைக்கண்டமான நமக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை. ஆனால் 3 ஆயிரம் ஏக்கரில் ஏர்போர்ட் கட்டுகிறார்கள் இதெல்லாம் யாருக்காக. . இவ்வாறு அவர் பேசினார்.

The post 50 நாள்ல சொர்க்கத்தை காட்டுறேன் என்றார் மோடி; பணம் இல்லாம செத்து சொர்க்கம் போனதுதான் மிச்சம்.! சீமான் செம தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: