அமைச்சர் ரோஜாவின் பிரசாரத்தை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மூன்றாவது முறையாக அமைச்சரும் நடிகையுமான ரோஜா போட்டியிடுகிறார். தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக வடமலாப்பேட்டை மண்டலம் வேமாபுரம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க திறந்த ஜீப்பில் நேற்றுமுன்தினம் இரவு சென்றார். அப்போது ரோஜாவின் பிரசார வாகனத்தை கிராம மக்கள் திடீரென தடுத்து நிறுத்தினர்.

எதற்கு தடுத்து நிறுத்துகிறீர்கள் என்று ரோஜா ஆதரவாளர்கள் கேட்டனர். அதற்கு பொதுமக்கள் 5 ஆண்டுகளாக தங்கள் கிராம பிரச்னைகளை தீர்க்காமல், இப்போது மட்டும் எப்படி ஓட்டு கேட்க வந்தீர்கள் என ரோஜா மீது கோபமடைந்தனர். இதனால் கிராம மக்களுக்கும் ரோஜாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் ரோஜா பிரச்சாரம் மேற்கொள்ள முயன்றபோது கிராம மக்கள் வீட்டின் கதவை அடைத்துக் கொண்டனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்து அமைச்சர் ரோஜா வாக்கு சேகரிக்க முடியாமல் திரும்பினார்.

The post அமைச்சர் ரோஜாவின் பிரசாரத்தை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: