புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்: ஆட்சியர் வல்லவன் அறிவிப்பு..!

புதுச்சேரி: புதுச்சேரியில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 3 ஆயிரம், 4 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. குறிப்பாக, மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36 ஆக பதிவாகி இருந்தது.

புதுச்சேரியை விட காரைக்காலில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. புதுச்சேரியில் கொரோனா பரவல் 15% எட்டியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்; கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரியும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான வல்லவன்; சண்டே மார்க்கெட், கடற்கரை சாலை, வணிக வளாகங்கள், நிறுவனங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். புதுச்சேரியில் அரசு,தனியார் நிறுவன ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

The post புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்: ஆட்சியர் வல்லவன் அறிவிப்பு..! appeared first on Dinakaran.

Related Stories: