ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 8ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ மோடி அரசு, தொடர்ந்து மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது. கூட்டாட்சி கோட்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. கவர்னர்களை பயன்படுத்தி சட்டப் பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது, மாநிலங்களின் வளர்ச்சிக்கு கடன் பெறுவதற்கு தடை விதிப்பது போன்ற வேலைகளை ஒன்றிய பாஜ அரசு செய்து வருகிறது.

குறிப்பாக, தமிழகம், கேரளம், மேற்குவங்கம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கவர்னர்களை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை செயல்பட விடாமல் முடக்கம் செய்து வருகிறது. இதற்கு எதிராக வரும் 8ம் தேதி டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள மாநில அரசு சார்பில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு ஆதரவாக அன்றைய தினம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது.

 

The post ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: