அமெரிக்காவுக்கு வைத்த பொறியில் சிக்கி 55 சீன கடற்படை வீரர்கள் நீரில்மூழ்கி பரிதாப பலி

லண்டன்: அமெரிக்கா,பிரிட்டிஷ் நீர்மூழ்கி கப்பல்களுக்கு தான் வைத்த பொறியில் சீன நீர்மூழ்கி கப்பல் சிக்கியதில் கடற்படை வீரர்கள் 55 பேர் நீரில் மூழ்கி பலியாயினர் என தகவல் வெளியாகி உள்ளது. சீன கடற்படைக்கு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் 6 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன.அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலில் ஒன்று,ஷாண்டாங்க் மாகாணத்தில் அருகில் உள்ள கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது கடலுக்கடியில் அமெரிக்கா,பிரிட்டிஷ் நீர்மூழ்கி கப்பல்களுக்காக சீனாவால் வைக்கப்பட்டிருந்த சங்கிலி மற்றும் நங்கூர பொறியில் அந்த கப்பல் சிக்கி கொண்டது. இதில், கப்பலின் கேப்டன் உள்பட 55 மாலுமிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என பிரிட்டிஷ் பத்திரிகை தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், பிரிட்டிஷ் உளவு துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘நீர்மூழ்கி கப்பல் ஆகஸ்ட் 21ல் பொறியில் சிக்கி கொண்டதால் அதில் இருந்து மீள்வதற்கே 6 மணி நேரம் ஆனது. அதனால்,கப்பலில் ஆக்ஸிஜன் அமைப்பு செயலிழந்து கேப்டன் மற்றும் 21 மாலுமிகள் உயிரிழந்து விட்டனர் ’’ என தெரிவித்தனர்.

The post அமெரிக்காவுக்கு வைத்த பொறியில் சிக்கி 55 சீன கடற்படை வீரர்கள் நீரில்மூழ்கி பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: