இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, படத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை என்பது குறித்து மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நீக்கினால் சான்றிதழ் வழங்குவது குறித்து பரீசிலிக்கப்படும் என்றும் சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கபட்டது. வெற்றிமாறன் தரப்பில், ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் தொடர்பாக சென்சார் போர்டின் தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்சார் போர்டு ஆட்சேபனையை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று பட தயாரிப்பாளர் வெற்றிமாறனுக்கு அனுமதி அளித்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
The post மனுஷி படத்தில் ஆட்சேபனை காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலனை: ஐகோர்ட்டில் சென்சார் போர்டு தகவல் appeared first on Dinakaran.
